தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீரான வானிலை... இன்று மாலை விண்வெளிக்கு பறக்கவிருக்கும் ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்

வாஷிங்டன்: வானிலை சீரானதால் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் இன்று மாலை 4.33 மணிக்கு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : May 27, 2020, 12:58 PM IST

விண்வெளி
விண்வெளி

ஸ்பேஸ்-எக்ஸ் என்ற தனியார் அமெரிக்க விண்வெளி மையம் சார்பாக, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று (மே 27) மாலை 4.33 மணிக்கு, விண்வெளிக்கு இரண்டு வீரர்களை ராக்கெட்டில் அனுப்பவுள்ளனது. இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நடக்கவுள்ளதால் மக்கள் மத்தியிலும், ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இரண்டு நாள்கள் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தினால், ராக்கெட் ஏவுதல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், வானிலையில் ஏற்பட்ட மாற்றம் சீரானதால், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டபடியே ராக்கெட் ஏவுதலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கென்னடி விண்வெளி மையத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணைத் தலைவர் மைக் பென்ஸ் ஆகியோர் இன்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வை, ttps://www.nasa.gov/nasalive என்ற இணையதளத்தில் மக்கள் நேரலையாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். இதுவரை ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் மட்டும்தான் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:2ஆம் உலகப் போரில் மாயமான டாக் டேக் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details