தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நிறவெறிப் போராட்டம்; அமெரிக்க தேசிய கீதம் இயற்றியவரின் சிலை சூறையாடல் - அமெரிக்க தேசிய கீதம்

வாஷிங்டன்: அமெரிக்க தேசிய கீதத்தை இயற்றிய பிரான்சிஸ் ஸ்காட் கியின் உருவச் சிலையை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.

Francis
Francis

By

Published : Jun 20, 2020, 9:13 PM IST

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர், காவலரால் சர்ச்சைக்குரிய முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக அந்நாடு முழுவதும் இனவெறிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நீதி கேட்டு உலகெங்கிலும் கலகக் குரல் ஒலித்துவருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் அந்நாட்டின் பிரபல கவிஞரும், அமெரிக்க தேசிய கீதத்தை இயற்றியவருமான பிரான்சிஸ் ஸ்காட் கியின் உருவச் சிலையை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர். அமெரிக்கா - பிரிட்டன் இடையே நடைபெற்ற போரில் அமெரிக்கா பெற்ற வெற்றியை குறிப்பிட்டு அவர் இயற்றிய "The Star-Spangled Banner" பாடல் பின் நாளில் அந்நாட்டின் தேசிய கீதமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பிலிருந்த நபர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்?

ABOUT THE AUTHOR

...view details