அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன், முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளை மாளிகை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் நேற்று திடீரென்று கடும் மழை பெய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையின் கீழ் தளப்பகுதிகளில் மழை நீர் புகுந்தது. மேலும், அப்பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களும் மழை வெள்ளத்தின் காரணமாக மூடப்பட்டது. வாகனங்களுக்குள் நீர் புகுந்துகொண்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக தவித்து வருகின்றனர்.
கடும் மழையால் 'வாஷ் அவுட்' ஆன வாஷிங்டன்
வாஷிங்டன்: திடீரென்று பெய்த கடும் மழையால் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன்னில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பிற்குள்ளானது.
wash
இந்த திடீர் மழை காரணமாக அங்குள்ள மக்களுக்கு அவசரநிலை எச்சரிக்கையை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் காவல்துறையினர், தீயனைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.