தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை! - கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையை ஆராய்ச்சியாளர்கள் தன்னார்வலருக்கு போட்டனர்

வாஷிங்டன்: கரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதனை ஒரு தன்னார்வலருக்குச் செலுத்தினர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை!

By

Published : Mar 17, 2020, 1:50 PM IST

கோவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது சீனாவில் குறைந்துவந்தாலும், மற்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் பலர் உயிரிழந்துவருகின்றனர். குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் சியாட்டிலிலுள்ள கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19ஐ கட்டுப்படுத்த தடுப்பு மருந்து ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர். இந்தத் தடுப்பூசியை சியாட்டிலைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாளர் ஜெனிபர் ஹாலர் (40) பெற்றுக்கொண்டார்.

எம்.ஆர்.என்.ஏ.-1273 என்ற குறியீட்டு பெயரைக் கொண்ட இந்தத் தடுப்பூசி தேசிய சுகாதார நிறுவனம், மாசசூசெட்ஸில் உள்ள உயிரி தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா இன்க்-ஆல் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கைசர் ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக் குழுத் தலைவர் டாக்டர் லிசா ஜாக்சன் கூறுகையில், கரோனாவிற்கு எதிராக நாங்கள் ஒரு அணி. இந்த அவசர நிலையில் இந்தத் தடுப்பூசி முக்கியமானது என்றார்.

இதையும் படிங்க...கரோனாவால் ஈரானில் அதிகரிக்கும் உயிர்பலி

ABOUT THE AUTHOR

...view details