இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தியை கரோனா தடுப்புப் படை துணைத் தலைவராக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் நியமித்தார். இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அமெரிக்க மருத்துவச் சேவை படைத் தலைவராக அவர் பதவி வகித்துள்ளார். அவர் எழுதிய 'Together: The Healing Power of Human Connection in a Sometimes Lonely World' என்ற புத்தகத்தை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு, அதிபர் ட்ரம்ப் கேட்டுக் கொண்டதையடுத்து, அமெரிக்க மருத்துவச் சேவை படைத் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார்.