தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மனிதர்கள் மீது செலுத்தி கரோனா தடுப்பூசி பரிசோதனையைத் தொடங்கிய அமெரிக்கா! - மருத்துவர் அந்தோனி ஃபவுசி

வாஷிங்டன்: 30 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய கரோனா  தடுப்பூசி பரிசோதனையை அமெரிக்கா இன்று தொடங்கியது.

மனிதர்களின் மீது செலுத்தி கரோனா தடுப்பூசி சோதனையை தொடங்கியது அமெரிக்கா!
மனிதர்களின் மீது செலுத்தி கரோனா தடுப்பூசி சோதனையை தொடங்கியது அமெரிக்கா!

By

Published : Jul 28, 2020, 1:06 AM IST

சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி, பல உலக நாடுகளுக்கும் பரவியது. அதன் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்கா, பல லட்சக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு, உலக நாடுகளில் பரிசோதனை செய்யப்பட்டுவரும் தடுப்பு மருந்துகளை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டது. இதற்குப் பல்வேறு தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து, பரிசோதனையில் தங்களைத் தன்னார்வலர்களாக இணைத்துக்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், இன்று 30 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் மாடர்னா இன்க் உருவாக்கிய தடுப்பு மருந்தினை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பூசிகள் பிரேசில் மற்றும் பிற நாடுகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதற்கிடையில், அமெரிக்கா, ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் தடுப்பு மருந்து குறித்த ஆய்வினைத் தொடங்குகிறது, பின்னர், செப்டம்பர் மாதம் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த மருந்து, அக்டோபரில் நோவாவாக்ஸினைக் கொண்டு ஒருவரைப் பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் திட்டமிட்டப்படி நடந்தால், சில மாதங்களில் ஃபைசர் இன்க் மூலம் 30 ஆயிரம் பேர் பரிசோதிக்கப்படுவர்.

ஆனால், இந்த மருந்துகள் நேர்மறையான முடிவுகளைத் தருமா, தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்துமா, சோதிக்கப்பட்டவரின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த எவ்வித உறுதிப்பாடுகளையும் கணிக்க முடியாது என மருத்துவர் அந்தோனி ஃபவுசி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details