அமெரிக்காவின் நேட்சர் இஸ் லிட் (Nature is Lit) என்ற ட்விட்டர் கணக்கானது, உலகின் புத்திசாலி விலங்கு என்ற தலைப்பில் ஆக்டோபஸின் 7 விநாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் தொட்டியில் வளர்க்கப்படும் ஆக்டோபஸானது, தனக்கு ஹலோ சொல்லும் நபருக்கு தனது காலை அசைத்து சைகையில் பதில் ஹலோ சொல்லியுள்ளது (பேச்சல்ல... உணர்வு).
'ஹலோ' சொல்லி வியப்பில் ஆழ்த்திய ஆக்டோபஸின் வைரல் வீடியோ! - நேச்சர் இஸ் லிட்
அமெரிக்கா: தனக்கு ஹாலோ சொல்லியவருக்கு பதில் ஹலோ சொல்லி அனைவரையும் ஆக்டோபஸ் ஒன்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
octopus
அந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. தினமும் எண்ணற்ற மனிதர்களின் ஹலோக்களை அந்த ஆக்டோபஸ் கவனித்துவருவதால், அது பழகிப்போன ஒன்றாகிவிட்டது என விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:பிரேசில் கார்னிவலுக்குப் படையெடுக்கும் நாய்களின் அலங்கார அணிவகுப்பு!