தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு - இஞ்சி இடுப்பழகியான வியட்நாம் பெண்

இஞ்சி இடுப்பழகிகளாக வலம் வர வேண்டும் என்ற ஆசை ஆண்டாண்டு காலமாய் பெண்களை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்காக மெனக்கெட்டு உடலை வறுத்திக்கொள்வதுதான் கடினமாக இருக்கிறது. ஆனால் அதையும் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறார் வியட்நாமை சேர்ந்த பெண் ஒருவர்.

vietnam-woman-eats-once-in-a-day
vietnam-woman-eats-once-in-a-day

By

Published : Jul 30, 2021, 10:33 PM IST

26 வயதாகும் அன் கி அமெரிக்காவில் வசித்து வருகிறார். கஃபே ஒன்றில் பணியாற்றிவரும் இவர், பகுதி நேரமாக நடனமாடியும் வருகிறார். இவரின் இடுப்பின் சுற்றளவே 46 சென்டிமீட்டர்கள்தானாம்.

முதல் முதலாக அன் கியின் சிறிய இடுப்பை துய் ங்கா என்ற வியட்நாமை சேர்ந்த தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் பார்த்து வியந்திருக்கிறார். ஒருமுறை துய் ங்கா அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அன் கி வேலை செய்துகொண்டிருந்த கஃபேவுக்கு சென்றுள்ளார். அங்கே அன் கியின் சிறிய இடுப்பை கண்டு ஆச்சரியப்பட்ட அவர், அவரை வைத்து காணொலி ஒன்றை உருவாக நினைத்தார்.

அந்தக் காணொலியில் அன் கியின் இடுப்பை காட்டி அதை எப்படி பராமரிக்கிறார் என அவரின் ரகசியத்தை கேட்டுள்ளார். அப்போது பேசிய அன் கி, தனக்கு 18 வயது இருந்தபோது தான் 50 கிலோ எடையுடன் இருந்ததாகவும், இடுப்பின் அளவு 60 சென்டிமீட்டராக இருந்ததாகவும் தெரிவித்தார். தனக்கு சிறிய இடுப்பு வேண்டும் என்ற ஆசை வெகு நாள்களாக இருந்ததால் தனது இடுப்பு அளவை குறைக்க பெரிதும் உழைத்ததாகக் குறிப்பிட்டார்.

தனக்கு சிறிய இடுப்பு வேண்டும் என்பதற்காக அன் கி நாள் ஒன்றுக்கு ஒரு முறையே உணவு உண்டிருக்கிறார். சில நேரம் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை உண்டிருக்கிறார். மாவுச்சத்து இருக்கும் உணவு உண்பதை இரண்டு ஆண்டுகளாக நிறுத்தியிருக்கிறார்.

தற்போது 37 கிலோ இருக்கும் அன் கி தனது ஆரோக்கியத்தை சமன்படுத்த அதிக அளவிலாக காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதாக தெரிவித்தார். இருப்பினும் அவருடைய சிறிய இடுப்பு அளவுக்கு ஆடை கிடைப்பது கடினம் என்றே கூறுகிறார்.

இதையும் படிங்க:ஒலிம்பிக்கில் ஆணுறை சப்ளை ஏன்?

ABOUT THE AUTHOR

...view details