அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். இவரது தாய் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் வெற்றியைக் கிராம மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினர். இந்தநிலையில், கமலா ஹாரிஸின் உறவினர் ஒருவர் அவரது பெயரை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தியதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கமலா ஹாரிஸின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ், பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் பல வகையான ஆடைகள், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் கமலா ஹாரிஸின் பெயரை உபயோகித்து விற்பனையில் லாபம் பார்த்து வந்ததாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, ‘வைஸ்-பிரெசிடென்ட் ஆண்டி’ என்ற ஆங்கில வாசகங்களுடன் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.