தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவிவருகிறது. கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டதால் உள்நாட்டு நெருக்கடியை அதிபர் மதுரோ தலைமையிலான அரசு சந்தித்துவருகிறது. இதனால், அதிபர் மதுரோ பதவி வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் க்வய்டோ சார்பில் போராட்டம் பேரணி நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட எழுச்சி மற்றும் கலவரங்களை ராணுவம் கொண்டு முடக்கிய அதிபர் மதுரோவுக்கு ரஷ்யா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியது.
அரசியல் தீர்வை நோக்கி வெனிசுலா அரசு? எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை
கராகாஸ்: கடும் அரசியல் குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் வெனிசுலா அரசு எதிர்க்கட்சியுடன் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.
mud
இந்நிலையில் மாதக்கணக்கில் இப்பிரச்னையை சந்தித்து வரும் வெனிசுலா தற்போது தீர்வை நோக்கி நகர்ந்துள்ளது. அந்நாட்டு அதிபர் மதுரோ, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பர்போடாஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினார். நார்வே அரசாங்கத்தின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நல்ல தொடங்கத்தை நோக்கிச் சென்றுள்ளதாக அதிபர் மதுரோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.