தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எனது விதி மக்கள் கையில் உள்ளது - வெனிசுலா அதிபர் நிக்கோலா மதுரோ - வெனிசுலா நாடாளுமன்ற தேர்தல்

கராகஸ்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக வெனிசுலா அதிபர் நிக்கோலா மதுரோ தெரிவித்துள்ளார்.

Venezuelan President Nicolas Maduro
Venezuelan President Nicolas Maduro

By

Published : Dec 2, 2020, 2:24 PM IST

வெனிசுலாவின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் 107 அரசியல் கட்சிகள், சங்கங்கள் போட்டியிடுகின்றன. ஜுவான் கைடோவின் கட்சியை உள்ளடக்கிய அந்நாட்டின் எதிர்க்கட்சி, இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவுசெய்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தொலைக்காட்சி உரையாடலில் பேசிய வெனிசுலா அதிபர் நிக்கோலா மதுரோ, "நாங்கள் வென்றால், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வோம்.

எதிர்க்கட்சி வெற்றிபெற்றால், நான் அதிபர் பதவியிலிருந்து விலகுவேன். மேலும், நான் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன். எனது விதி வெனிசுலா மக்களின் கைகளில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐநா பொதுச்சபையில் உரையாற்றவுள்ள உலகத் தலைவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details