மருத்துவர் எபோனி ஜேட் ஹில்டன், மருத்துவர் லே- ஆன் வெப் ஆகிய இருவரும் சிறுவர்களுக்காக உருவாக்கிய 'வீ ஆர் கோயிங்க் டு ஓ.கே.' என்ற இ-புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர்கள் உருவாக்கியுள்ள புத்தகம், சிறுவர்களுக்கு கோவிட்- 19 குறித்த புரிதலைப் பெறுவதற்கு ஏற்ற வகையிலும், இந்தப் பெருந்தொற்று காலத்தில் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து மீண்டு வருவதற்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைக்கு கோவிட்-19 பற்றிப் புரிதலை ஏற்படுத்துவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்புத்தகம், எமோரி உலக சுகாதார நிறுவனத்தின் கோவிட்-19 தொடர்பாக சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இ-புத்தகப் போட்டியில் முதல் ஐந்து இடத்திற்குள் உள்ளது.
"பயத்தின் எதிரி சரியான தகவல் என்ற புரிதலால், சிறுவர்களுக்கு உரிய தகவலை கொண்டு சேர்த்து அவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என இப்புத்தகத்தை வடிவமைத்துள்ளோம். 5 வயது முதல் 9 வயது வரை உள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட இப்புத்தகத்தில், இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்கள் பெறும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் பிரத்யேகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.