கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸ் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மக்களுக்குப் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களது முன்னிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார். வெள்ளை மாளிகையின் கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவக் குழுவின் தலைவராக உள்ள மைக் பென்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி கரேன் பென்ஸ் சர்ஜன் ஜெனரல் ஜெரோம் ஆடம்ஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர்.