கரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் தற்போது தீவிரமாக அதிகரித்துவருகிறது. அந்நாட்டில் கரோனாவால் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 348 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து பரபரப்படைந்த துணை அதிபர் அலுவலகம் இந்தச் செய்தியை மைக் பென்ஸிடம் தெரிவித்தது.
இதையடுத்து மைக் பென்ஸும் அவரது மனைவி கரேன் பென்ஸும் கரோனா கண்டறியும் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் இருவருக்கும் நோய் பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க கடுமையாக முயற்சித்துவருகிறது. நோய் தடுப்பூசி கண்டுபிடிக்க சோதனைகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கரோனா பாதித்தவர்களுக்கான புதிய மருத்துவ முறைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா: 4,800 உயிர் பலிக்கு இத்தாலியின் இந்தப் பொறுப்பற்ற செயல்தான் காரணமா?