தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க - தாலிபான்களிடையே கையெழுத்தானது ஒப்பந்தம் - அமெரிக்கா - தாலிபான் அமைதி ஒப்பந்தம்

தோகா: 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவந்த பதற்றத்தை தனிக்கும் வகையில், அமெரிக்க - தாலிபான் பயங்கரவாதிகளிடையேயான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

US, Taliban sign peace deal
US, Taliban sign peace deal

By

Published : Feb 29, 2020, 9:49 PM IST

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான்கள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் குற்றஞ்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்க தாக்குதலை நடத்திவந்தது.

இதனால் ஆண்டுக்கு 750 பில்லியன் டாலர்கள் வரை அமெரிக்காவுக்கு செலவாகிறது. இதேபோல, ஆண்டுக்கு பல அமெரிக்க வீரர்களும் ஆப்கானிஸ்தானில் உயிரிழக்கின்றனர். இது தேவையற்ற செலவு என்றும், அமெரிக்காவிலுள்ள படைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் பல அரசியல்வாதிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்குமிடையேயான ஒப்பந்தம் இன்று கத்தர் நாட்டிலுள்ள தோகாவில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, 135 நாள்களுக்கு தாலிபான்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்றினால், ஆப்கானிஸ்தானிலுள்ள தனது வீரர்கள் எண்ணிக்கையை 8,600 ஆக அமெரிக்க குறைக்கும் என்று உறுதியளித்துள்ளது.

மேலும், ஒப்பந்தத்திலுள்ள அனைத்து நிபந்தனைகளையும் தாலிபான்கள் நிறைவேற்றினால், 14 மாதங்களில் அமெரிக்க தனது அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் அதன் உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் தரப்படமாட்டாது என்று தாலிபான்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மலேசியா பிரதமராகப் பதவியேற்கிறார் முஹைதீன் யாசின்!

ABOUT THE AUTHOR

...view details