தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பரபரப்பான கட்டத்தில் மறுவாக்கு எண்ணிக்கை: முடிவுகளை மாற்றிப் போடுமா ஜார்ஜியா? - American election

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் எண்ணும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தேர்தல்
அமெரிக்கா தேர்தல்

By

Published : Nov 7, 2020, 3:47 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடனே பல மாகாணங்களில் முடிவுகளை அறிவிக்க தொடங்கிவிட்டனர். தொடக்கத்தில் பல மாகாணங்களில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் இருந்தாலும், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற ஜனநாயக கட்சியின் பிடன் கடும் போட்டி அளித்தார்.

கடும் சவால் நிறைந்த விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் பிடன் வெற்றிபெற்றதாக அறிவிப்பு வெளியானது. ஜார்ஜியா மாகாணத்தில் ஜனநாயக கட்சி, குடியரசு ஆகிய கட்சிகளுக்கிடையேயான வாக்கு வித்தியாசம் சுமார் 2000 வாக்குகளுக்கு குறைவாக உள்ளதால் அங்கு மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிடன்

இதுகுறித்து ஜார்ஜியா மாகாண அமைச்சர் பிராட் ராஃபென்ஸ்பெர்கர் கூறுகையில், "பிடன், ட்ரம்ப் ஆகியோருக்கிடையேயான வித்தியாசம் குறைவாக உள்ளதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். இருவருக்கும் இடையே போட்டி சவாலாக உள்ளது" என்றார். வெள்ளிக்கிழமை காலை, வாக்கு வித்தியாசம் சுமார் 1500 வாக்குகள் மட்டுமே இருந்தது. மாகாணத்தின் தெற்கு பகுதியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், அது ட்ரம்ப்புக்கு பின்னடைவாக மாறியது எனக் கூறப்படுகிறது.

ஜார்ஜியா மாகாணத்தில் செனட் சபை உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றுள்ளதால், அந்த மாகாணம் மிக முக்கியமாக கருதப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details