தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2020, 2:25 AM IST

ETV Bharat / international

சீனாவைக் கட்டம் கட்டும் அமெரிக்கா - 18 புள்ளி செயல்திட்டம் ரெடி!

வாஷிங்டன் : கோவிட்-19 பெருந்தொற்று குறித்த உண்மைகளை உலகிடமிருந்து மூடி மறைந்த சீனாவைத் தனிமைப்படுத்தும் நோக்கில், அமெரிக்க செனட் உறுப்பினர் ஒருவர் 18 புள்ளிகள் கொண்ட செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

US China Corona Tussle
US China CoronaTussle

சீனாவின் வூஹானில் தோன்றிய கோவிட்-19 என்ற பெருந்தொற்று, உலகெங்கிலும் பரவி மிகப்பெரும் பேரிடரை ஏற்படுத்திவருகிறது.

இந்த நோய் காரணமாக, இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 பரவலைத் தடுக்க இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தொழில்கள் முடங்கி உலக பொருளாதாரம் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவிட்-19 பெருந்தொற்று குறித்த உண்மையைச் சீனா மூடி மறைத்ததே இந்த பேரிடருக்குக் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, சீனாவைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்க செனட் (நாடாளுமன்ற மேல் சபை) உறுப்பினர் தோம் தில்லிஸ் 18 புள்ளிகள் கொண்ட செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த செயல்திட்டத்தில் அவர் கூறியுள்ளதாவது, "(கோவிட்-19) பெருந்தொற்று குறித்து சீனா நயவஞ்சகமாக மூடி மறைத்தால் தான் ஏராளமான அமெரிக்கர்கள் துயரத்தில் உள்ளனர்.

இந்த அரசுதான் (சீனா) அதன் மக்களை வதை முகாம்களில் அடைக்கிறது. அமெரிக்கத் தொழில்நுட்பத்தையும், வேலைவாய்ப்பையும் திருடுகிறது. நம் நேச நாடுகளின் இறையாண்மையையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவும், ஒட்டுமொத்த சுதந்திர உலகம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

கோவிட்-19 குறித்து பொய் சொன்ன சீனா அரசைப் பொறுப்பேற்கச் செய்வதே என் செயல்திட்டம்.

சீனாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அதே சமயம், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பும், சுகாதாரமும், பொருளாதாரமும் பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் தொழிற்சாலைகளை மீண்டும் அமெரிக்காவுக்கே கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். விநியோக சங்கிலியில் சீனாவை நம்பியிருப்பது படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். நம் தொழில்நுட்பத்தைச் சீனா திருடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இணைய பாதுகாப்பு (cyber Security) வலுவாக்க வேண்டும்.

சீனா அதன் கடன்களை அடைக்க அமெரிக்கர்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஹுவாவே நிறுவனத்தின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். நட்பு நாடுகளையும் அதனை மேற்கொள்ள ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மேலும், பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுத்த நிறுத்த ராணுவத்துக்கு 20 பில்லியின் டாலர் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், அப்பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடனான ராணுவ உறவை ஆழப்படுத்தவும், இந்தியா, தைவான், வியாட்நாம் ஆகிய நாடுகளுக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்வதை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அந்த செயல்திட்டம் கோருகிறது.

இதுதவிர, சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியாவின் பாதுகாப்புப் படையை வளர்க்கவும், அவற்றுக்கு ராணுவ ஆயுதங்களை விநியோகம் செய்யவும் தில்லிஸின் செயல்திட்டம் முன்மொழிகிறது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆசண்டு நடக்கவுள்ள வின்டர் ஒலிம்பிக்கைக் கைவிடுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு வேண்டுகோள் விடுக்குமாறு செனட் உறுப்பினர் தில்லிஸின் திட்டம் அமெரிக்க அரசை வலியுறுத்துகிறது.

கோவிட்-19 குறித்து சீன அரசு மூடிமறைத்த விவகாரத்தை விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க அரசை வலியுறுத்தும் இந்த செயல்திட்டம், வளரும் நாடுகளைக் கடன் வலையில் சிக்கவைக்கும் சீனாவின் ராஜதந்திரத்தை உலகிற்கு உடைத்துக் காட்டவும், வரும் காலங்களில் கொடூர வைரஸ்கள் பரவும் போது அதனை அந்நிய நாடுகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைக் கண்காணிக்கச் சர்வதேச அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டும் என்றும் முன்மொழிகிறது.

இதையும் படிங்க : வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் உஷார்!

ABOUT THE AUTHOR

...view details