தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் நியமனம்; செனட் ஒப்புதல் - ஆந்தோனி பிளிங்கன்

அமெரிக்க அரசின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ஆண்டனி பிளிங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Antony Blinken
Antony Blinken

By

Published : Jan 27, 2021, 9:42 AM IST

அமெரிக்காவின் புதிய அரசு அண்மையில் பொறுப்பேற்றது. புதிய அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்.

இதையடுத்து, அங்கு பல்வேறு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய அரசின் கொள்கைகளை பிரதிபலிக்கும் விதமாக அமைச்சரவை, உயர் அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ஆண்டனி பிளிங்கன் நியமிக்கப்பட்டுள்ளார். பிளிங்கனின் நியமனத்திற்கு அந்நாட்டு மேலவையான செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பு வகித்தபோது, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் பிளிங்கன் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கைது; ஜி-7 நாடுகள் கண்டனக்குரல்

ABOUT THE AUTHOR

...view details