தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் சரிய தொடங்கும் கோவிட்-19 பாதிப்பு - அமெரிக்காவில் கோவிட்-19 தடுப்பூசி

அமெரிக்காவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை சரிய தொடங்கியுள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

US
US

By

Published : Mar 16, 2021, 5:28 PM IST

அமெரிக்காவில் கோவிட்-19 பாதிப்பு நிலவரம் குறித்து அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்தப் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 40 ஆயிரத்து 428 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்திற்குப்பின் மிகக்குறைவான பாதிப்பை அமெரிக்கா தற்போது கண்டுள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கையும் 600-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. அந்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இதுவரை, 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அங்கு பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்நாட்டில் வரும் மே மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரயில்வேயை தனியார்மயமாக்க திட்டமில்லை - பியூஷ் கோயல் உறுதி

ABOUT THE AUTHOR

...view details