ஜூன் 15-16ஆம் தேதிகளில் இந்திய- சீன எல்லையில் சீன வீரர்கள் இந்திய வீரர்களை தாக்கினர். இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.
இதனையடுந்து இந்த வார தொடக்கத்தில் இந்திய இறையாண்மை, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதற்கு சீனத் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் சீன பயன்பாட்டுத் தடையை வரவேற்பு தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாம்பியோ, “இந்தியாவின் இறையாண்மையை நிலைநாட்டும் வண்ணம் சீன செயலிகளை தடை விதித்தை வரவேற்கிறேன்.