தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 27, 2020, 4:02 PM IST

ETV Bharat / international

சூடான் மீதான தடை நீக்கம்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

பயங்கரவாதிகளுக்கு ஆதாரவு தருவதாகத் தடை பட்டியலிலிருந்த சூடான் மீதான தடையை தற்போது அமெரிக்கா நீக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Donald Trump
Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியுறவுக் கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார். அதன் முக்கிய அம்சமாக ஆப்பிரிக்க நாடான சூடானுடனான வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா தற்போது சீர் செய்துள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளைக் காரணம்காட்டி 1993ஆம் ஆண்டிலிருந்து சூடான் நாட்டிற்குத் தடைவிதித்து அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது. சூடன் தனது செயல்பாட்டை மெள்ள சீர் செய்துள்ளதாக காரணம் காட்டி தற்போது அதை நீக்கியுள்ளார்.

அந்நாடு தனது பயங்கரவாத செயல்களைத் தவிர்த்து இஸ்ரேல் உள்ளிட்ட மோதல் நாடுகளுடன் சுமுக உறவை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவுக்குப் பயங்கரவாத பாதிப்பு நிதியாக சுமார் இரண்டாயிரத்து 500 கோடியாக தர ஒப்புதல் உள்ளது. இதையடுத்து, அந்நாட்டின் மீதான தடை நீக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் மோதலைவிட்டு நல்லுறவை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கு அமெரிக்கா மையப்புள்ளியாக இருந்து மத்தியஸ்தம் செய்துள்ளது.

இதையும் படிங்க:இனிமே டிக்டாக் எல்லா இங்க பேன்...தடை விதித்த பாகிஸ்தான் காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details