வாஷிங்டன் (அமெரிக்கா):அமெரிக்காவில் தேர்தல் நாளன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்க தேர்தல் நாளில் உச்சத்தைத் தொட்ட கரோனா! - அமெரிக்கா கொரோனா
உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனா நோய் கிருமித் தொற்று பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் தீவிரமடைந்து வரும் கரோனா, தேர்தல் நாளில் மட்டும் புதிய உச்சமாக 91ஆயிரம் மேற்பட்டோரைத் தாக்கியுள்ளது.
அமெரிக்காவில் கரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் புதிய உச்சத்தையும் தேர்தல் நாளான்று தொட்டுள்ளது. இச்சூழலில், அமெரிக்காவில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 91ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதனால் மொத்தமாக பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 1170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 62.82 லட்சத்தைத் தாண்டிய நிலையில், தற்போது 32.73 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.