உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 3,800 பேர் உயிரிழந்தனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். தற்போது அமெரிக்கா இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வருகிறது. இதனால் அங்கு சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில், ஓரிகான், கலிபோர்னியா மாகாணங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாரும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குப் பயணிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக இந்தத் தொற்று வாஷிங்டன் மாகாணத்தில் பரவுவது கண்காணிக்கப்படாமல் இருந்தது இதன்மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை அமெரிக்காவின் 30 மாகாணங்களில் இந்த நோய் தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100-க்கும் அதிகமான நாடுகளில் புதிதாக கோவிட் - 19 பாதிப்புள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலை ‘பொது சுகாதார அவசரநிலை’ என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்ரம்ப் அரசாங்கம், சீனா, ஈரான், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்துள்ளது.