தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டிசம்பர் இறுதிக்குள் அமெரிக்காவுக்கு கரோனா தடுப்பூசி! - அமெரிக்காவுக்கு வழங்கப்படும் கரோனா தடுப்பூசி

மாடர்னா நிறுவனத்திடமிருந்து கரோனா தடுப்பூசிகளை அமெரிக்க அரசு ஆர்டர் செய்துள்ள நிலையில், முதல்கட்டமாக 20 மில்லியன் தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவுக்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

US purchases 100 million Covid19 vaccine
US purchases 100 million Covid19 vaccine

By

Published : Dec 12, 2020, 11:53 AM IST

பயோடெக் நிறுவனமான மாடர்னா நிறுவனத்திடமிருந்து அமெரிக்க அரசு கூடுதலாக 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்தது. முன்னதாக 100 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்க அரசு ஆர்டர் செய்திருந்தது.

இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க அரசு முன்பு ஆர்டர் செய்திருந்த 100 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளில் 20 மில்லியன் தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும். மீதமுள்ள தடுப்பூசிகள் அடுத்த காலாண்டில் (2021) வழங்கப்படும். புதிதாக ஆர்டர் செய்திருக்கும் 100 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இரண்டாம் காலாண்டில் வழங்கப்படும்" என தெரிவித்திருந்தது.

இதுகுறித்து அமெரிக்க சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார் கூறுகையில், "மாடர்னா நிறுவனத்திடமிருந்து அடுத்த 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்குவது, அமெரிக்க அரசின் ஆப்பரேஷன் வார்ப் ஸ்பீட் கூட்டாண்மையிடம் எங்களின் தடுப்பூசி வழங்கும் அளவை விரிவுப்படுத்தும்." என்றார்

"அமெரிக்காவுக்கும், அமெரிக்காவுக்கு வெளியேயும் எங்கள் தடுப்பூசி உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்க நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். இந்த பெருந்தொற்றை சரி செய்ய தடுப்பூசிகளைப் பயன்படுத்தி எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம் " என நியூயார்கைச் சேர்ந்த பயோடெக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்டீஃபேன் பேன்சல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... ஃபைஸர் தடுப்பு மருந்திற்கு பச்சை கொடி

ABOUT THE AUTHOR

...view details