அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இதில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்குகிறார். இத்தேர்தலில் பிடனுக்கு ஆதரவாகப் பலரும் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
அதன்படி, தற்போது பிடனுக்கு ஆதரவாக புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பரப்புரை மேற்கொள்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக இடங்களைக் கொண்டுள்ள முக்கிய மாகாணங்களில் ஒன்றாகப் புளோரிடா கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் புளோரிடா மாகாணத்தில் குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் மாறி மாறி வெற்றிபெற்றுள்ளன. குறிப்பாக, 2016ஆம் ஆண்டு தேர்தலில் ட்ரம்ப் 49.02 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் 47.82 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.