தனியொரு ஆளாகப் பருவநிலை மாற்றங்களுக்கு எதிராகத் தனது போராட்டத்தைத் தொடங்கிய கிரேட்டா தன்பெர்க் ஐநாவில் பேசிய உணர்ச்சி மிகு பேச்சுசமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதேபோல், அங்கு வந்த ட்ரம்பை கிரேட்டா தன்பெர்க் முறைத்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
கிரேட்டாவை நக்கலடித்த ட்ரம்ப்! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்
நியூயார்க்: ஐநாவில் பருவநிலை மாற்றம் குறித்து மிக உருக்கமாகப் பேசிய கிரேட்டா தன்பெர்க்கின் பேச்சை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Greta Thunberg
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப தனது ட்விட்டர் பக்கத்தில் கிரேட்டா தன்பெர்க் பேசும் பேச்சின் வீடியோவை பகிர்ந்து, "அவர் பிரகாசமான மற்றும் அற்புதமான ஒரு எதிர்காலத்தைக் கொண்ட, மகிழ்ச்சியான ஒரு பெண்ணாகத் தெரிகிறார்" என்று நக்கலடிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: நியூயார்க்கில் உலகத் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
Last Updated : Sep 25, 2019, 7:09 AM IST