ஹூஸ்டனில் அடிக்ஸ் ஹவல் சாலையில் உள்ள தபால் நிலையத்திற்கு, சந்தீப் சிங் தலிவால் பெயர் சூட்ட அமெரிக்க, 'செனட்' சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க தபால் நிலையத்திற்கு இந்தியரின் பெயர்! - US post office to be named after slain Sikh police officer
ஹூஸ்டன்: 2019இல் பணியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட முதல் சீக்கிய காவல் துறை அலுவலரின் பெயரை, ஹூஸ்டன் தபால் நிலையத்திற்கு வைத்திட அமெரிக்க 'செனட்' சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சந்தீப் சிங் தாலிவால், 2015இல் அமெரிக்கா காவல் துறை பணியில் இணைந்தார். இதன் மூலம், அமெரிக்காவின் முதல் சீக்கிய போலீஸ் என்ற பெருமையை பெற்றார். இதுமட்டுமின்றி, ரோந்து பணியின் போது அவர் தலைப்பாகை அணியவும், தாடியை வைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம், அவர் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
கடந்த 2019, செப்டம்பரில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த தாலிவாலை காரில் வந்த நபர் சுட்டுக்கொன்றார். இதையடுத்து, அவர் அமெரிக்காவில் ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில், ஹூஸ்டன் நகரின் ஹோவெல் சாலையில் உள்ள அடிக்ஸ் தபால் நிலையத்துக்கு அவருடைய பெயர் சூட்டப்படுகிறது. இதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த தீர்மானம், அதிபர் ட்ரம்பின் ஒப்புதலுக்காக வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.