அமெரிக்காவின் மினஸ்சோட்டா மாகாணத்தின் மினியாபோலிஸ் நகரில், கறுப்பினத்தைச் சேர்ந்த 45 வயதுடையஜார்ஜ் ஃப்ளாய்ட் அந்நாட்டுக் காவலரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதன் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த இனவெறிச் செயலை நடத்திய காவல் துறையைக் கண்டித்தும் ஃப்ளாய்டுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கோரியும் அமெரிக்காவில் பொதுமக்கள் பேரணியாகச் சென்றும் போராடியும் வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக லாஸ் வேகஸ் ஸ்ட்ரிப் பகுதியில் பொதுமக்கள் திரளாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் மற்றொரு சம்பவத்தில் காவலருக்கும் சமூக விரோதி ஒருவருக்கும் இடையே நடத்த மோதலில், காவலர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். இது அப்பகுதியில் மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் வேகஸ் ஸ்ட்ரிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 338 பேர் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து போராட்டதைக் கலைக்க பொதுமக்கள் மீது கண்ணீர் புகை, மிளகு பந்துகள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பயன்படுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:'வாயை மூடுங்க ட்ரம்ப்' - அதிபர் பேச்சால் கோபமான அமெரிக்க காவலர்