அமெரிக்க கடற்படை தனது ட்விட்டர் பக்கத்தில் Tactical விமானத்திற்கு விமானியாக வரும் முதல் கறுப்பினப் பெண் லெப்டினென்ட் ஜேஜி மேட்லைன் ஸ்வெகலை(Madeline Swegle) வரவேற்று ட்வீட் செய்துள்ளது.
அமெரிக்க கடற்படையில் Tactical விமானத்தை இயக்கும் முதல் கறுப்பினப் பெண் விமானி! - லெப்டினென்ட் ஜே ஜி மேட்லைன் ஸ்வெகல்
வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையின் Tactical விமானத்திற்கு விமானியாக வரும் முதல் கறுப்பினப் பெண் லெப்டினென்ட் ஜேஜி மேட்லைன் ஸ்வெகலை கடற்படை வீரர்கள் வரவேற்றுள்ளனர்.
அதில், "வரலாற்றை உருவாக்குதல்!' லெப்டினென்ட் ஜேஜி மேட்லைன் ஸ்வெகல் கடற்படை விமானப் பள்ளியை முடித்துவிட்டார். இம்மாத இறுதியில் "விங்ஸ் ஆஃப் கோல்டு"(Wings of Gold) என அழைக்கப்படும் விமான அலுவலர் சின்னத்தைப் பெறுவார். கடற்படையில் Tactical விமானத்தை இயக்கப்போகும் முதல் கறுப்பினப் பெண் விமானி இவர் ஆவர்" எனக் குறிப்பட்டுள்ளனர்.
வர்ஜீனியாவின் பர்க் நகரைச் சேர்ந்த ஸ்வெகல், 2017ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்றார். இதையடுத்து, டெக்சாஸின் கிங்ஸ்வில்லில் உள்ள ரெட்ஹாக்ஸ் ஆஃப் பயிற்சிப் படை 21இல் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.