இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் மார்க் மெடோஸ் கூறுகையில், "தென் சீனக் கடலுக்கு இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளோம். அமெரிக்காவின் ராணுவ பலத்தைக் காட்டவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். சீனா போன்ற நாடுகள் இந்தியாவிலோ வேறெந்த பிராந்தியத்திலோ அராஜக போக்கை கையாள்வது, ஆதிக்கத்தைச் செலுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டால் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.
இந்தியா - சீனா இடையே கடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையில் மோதல் நிலவிவருகிறது. இதனிடையே, ஜூன் 15ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர கைகலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றது.