தமிழ்நாடு

tamil nadu

கரோனாவின் புதிய மையப் புள்ளி அமெரிக்கா - உலக சுகாதார அமைப்பு

By

Published : Mar 25, 2020, 10:18 AM IST

Updated : Mar 25, 2020, 10:47 AM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், நோய் பாதிப்பின் புதிய மையப் புள்ளியாக அமெரிக்கா மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

USA
USA

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களில் அதிதீவிரமாக அதிகரித்துவருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது. அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 11 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 24 மணி நேரத்தில் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமும் ஆயிரக்கணக்கானோர் நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் முகக்கவசம், வென்ட்டிலேட்டர் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அங்கு ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் நிலைமை சீர்செய்யப்படும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த உலக சுகாதார அமைப்பு, கடந்த 10 நாட்களாக ஐரோப்பாவில் மோசமான சூழல் நிலவிவந்த நிலையில், கரோனாவின் புதிய மையமாக அமெரிக்கா மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், உலகளவில் ஏற்பட்டுள்ள புதிய வைரஸ் தொற்று அமெரிக்காவில் பதியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 54 ஆயிரத்து 823 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 778 பேர் நோய் பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.

இதையும் படிங்க:அறமற்ற அலட்சியத்தால் பாமரர்களைப் படுகுழியில் தள்ளாதீர்கள்

Last Updated : Mar 25, 2020, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details