தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா: மற்ற நாடுகளை விட ஒரே நாளில் அதிக உயிரிழப்புகளை பதிவு செய்த அமெரிக்கா!

கரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மற்ற நாடுகளை விட, அமெரிக்காவில்தான் முதன் முறையாக இரண்டாயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

Coronavirus toll surpasses 2,000 in single day in US
Coronavirus toll surpasses 2,000 in single day in US

By

Published : Apr 11, 2020, 12:12 PM IST

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்களின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் புதிதாக 33, 752 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டியுள்ளது. அவர்களில், 27, 314 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேசமயம், நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 2,108 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், நேற்று ஒரு நாளில் உலகளவில் மற்ற நாடுகளை விட முதன்முறையாக அமெரிக்காவில்தான் இரண்டாயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,545ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக நியூயார்க் மாகாணத்தில் மட்டும் இதுவரை கரோனாவால் ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக கரோனாவால் அதிகம் உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலிக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்திலிருந்த ஸ்பெயினை தற்போது அமெரிக்கா மிஞ்சியுள்ளது.

ஸ்பெயினில் இதுவரை 16,081 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இத்தாலியில் இதுவரை 18,849 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. உலகளவில் கரோனாவால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்திய மக்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் நன்றி!

ABOUT THE AUTHOR

...view details