தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'62 நாள்கள் கரோனாவுடன் போராட்டம்... 181 பக்கங்களுக்கு பில்: அதிர்ச்சியில் உறைந்த முதியவர் - அமெரிக்கா ஸ்வீடிஷ் மருத்துவமனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் 62 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவருக்கு ரூபாய் 8 கோடிக்கான பில்லை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.

corona
corona

By

Published : Jun 14, 2020, 11:08 PM IST

Updated : Jun 15, 2020, 6:18 AM IST

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 831ஆக அதிகரித்துள்ளது.

இத்தகைய இக்கட்டான போராட்டத்தில் ஒரு முதியவரை கரோனாவிலிருந்து காப்பாற்றிய மருத்துவர்கள், அவருக்கு 181 பக்கங்களில் பில்லை கொடுத்து மீண்டும் படுக்கைக்கே அனுப்ப பார்த்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் இசாகுவா பகுதியில் ஸ்வீடிஷ் மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக 70 வயதான மைக்கேல் ஃப்ளோர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் 62 நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த அவர், இரண்டு முறை ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டு உயிர் பிழைத்துள்ளார்.

குணமடைந்து வீடு திரும்புவது குறித்து மகிழ்ச்சியுடன் இருந்த அவரிடம் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கான பில்லை வழங்கியுள்ளது‌. ஒரே நிமிடத்தில் அந்த பில் அவரை, ஏன் உயிர் பிழைத்தோம் என்ற எண்ணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அவருக்கு 181 பக்கங்களுக்கு வழங்கிய பில்லின் மொத்த தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் ரூபாய் 8 கோடி) ஆகும்.

குறிப்பாக ஐ.சி.யூ அறைக்கு மொத்த செலவாக ரூபாய் 3 கோடி ரூபாயும், 29 நாள்கள் இயந்திர வென்ட்டிலேட்டரில் அவரை வைத்ததற்கான செலவாக ரூபாய் 62 லட்சமும், இரண்டு நாள்களுக்கு இதயம், சிறுநீரகம், நுரையீரல் அனைத்தும் தோல்வியுற்றதால் தீவிர சிகிச்சைக்காகவும், அவசரகால மருத்துவ உபகரணங்களாகவும் கிட்டத்தட்ட 76 லட்சம் ரூபாயும் செலவாகியுள்ளன. இதைப்போல், 181 பக்கங்களுக்கு இதர செலவுகள் குறித்து குறிப்பிட்டிருந்தனர்‌

அவரிடம் இருக்கும் ஓரே நல்ல செய்தி என்னவென்றால், மெடிகேர் உள்ளிட்ட காப்பீடுகளுக்கு பதிவு செய்திருந்ததால் பெரும் தொகையை செலுத்த வேண்டியதில்லை.

இதுகுறித்து ஃப்ளோர் கூறுகையில், " "உயிர் பிழைத்ததில் நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். ஏன் நான் உயிர் பிழைத்தேன்? இதற்கெல்லாம் நான் தகுதியானவனா? என்ற கேள்விகள் மனதில் எழுந்தது" எனத் தெரிவித்தார்

Last Updated : Jun 15, 2020, 6:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details