தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவுக்கு வர்த்தக அந்தஸ்து வழங்க ட்ரம்புக்கு கடிதம்!

வாஷிங்டன்: இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கி வந்த வர்த்தக அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் இந்தியாவுக்கு வழங்கிடுமாறு 40 அமெரிக்க எம்பிகள் அந்நாட்டு அதிபர் ட்ரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

trump

By

Published : Sep 19, 2019, 8:49 AM IST

இந்தியாவுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை ( Generalised System of preference) அமெரிக்க அரசு கடந்த ஜூன் மாதம் திரும்பப் பெற்றுக் கொண்டது.

அதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், ஆப்பிள் உள்ளிட்ட 25 பொருட்களுக்கு 120 சதவீதம் வரை இந்தியா வரி விதித்தது. இதனால், இந்தியா-அமெரிக்கா வர்த்தக நல்லுறவு சறுக்களை சந்திதுள்ளது.

இந்நிலையில், திரும்பப் பெறப்பட்ட வர்த்தக அந்தஸ்தை மீண்டும் இந்தியாவுக்கு அளிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 40 எம்பிகள் அதிபர் ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details