தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் படித்துவிட்டு வேலை பார்க்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய சட்டம் - வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய சட்டம்

அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக தங்கியிருக்கும் மாணவர்களுக்காக ஏற்கனவே உள்ள சட்டத்தை அகற்றும்படி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எம்பிக்கள் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய சட்டம்
வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய சட்டம்

By

Published : Jul 29, 2021, 11:36 AM IST

பால் ஏ கோசர், மோ ப்ரூக்ஸ், ஆண்டி பிக்ஸ், மேட் கெய்ட்ஸ் ஆகியோர் ஒன்றிணைந்து பேர்னஸ் பார் ஹை ஸ்கில்ட் அமெரிக்கன்ஸ் ஆக்ட் என்னும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது விருப்ப நடைமுறை பயிற்சி (Optional Practice Training- OPT) தொடர்பான குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தை திருத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோசர் கூறுகையில், "எந்த நாடு அதன் குடிமக்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை வேலையில் அமர்த்தும்? நிச்சயம் அமெரிக்காதான்" என்றார்.

விருப்ப நடைமுறை பயிற்சி என்பது குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க துறையால் நிர்வகிக்கப்படும் விருந்தினர் பணியாளர் திட்டமாகும். விருப்ப நடைமுறை பயிற்சி மூலம் சுமார் ஒரு லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அங்கேயே மூன்று ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவதாக கோசர் தெரிவித்தார்.

இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஊதிய வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனையடுத்து அமெரிக்க தொழிலாளர்களைவிட இவர்களது சம்பளம் 10- 15 விழுக்காடு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விருப்ப நடைமுறை பயிற்சி அகற்றப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:அமெரிக்காவில் விமான விபத்து- 6 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details