தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்திய - அமெரிக்க உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி - இந்திய - அமெரிக்க உறவை மேம்படுத்த நடவடிக்கை

டோக்கியோ: இந்திய பசிபிக் பெருங்கடலில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இந்திய-அமெரிக்க உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

US-India relations
US-India relations

By

Published : Oct 6, 2020, 10:26 PM IST

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் குவாட் என்ற அமைப்பை 2017ஆம் ஆண்டு உருவாக்கியது. இந்திய பசிபிக் பெருங்கடலில் மற்ற நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது.கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குவாட் அமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

குவாட் அமைப்பு நாடுகளின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்து பேசினார்.

இந்திய பசிபிக் பெருங்கடலில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இந்திய-அமெரிக்க உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாம்பியோ மேலும் கூறுகையில், "வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டேன். இந்திய அமெரிக்க உறவை மேம்படுத்தவும் கரோனாவின் தாக்கத்தை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் அமைதியை நிலைநாட்டவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

குவாட் நாடுகளின் கூட்டணி குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், "டோக்கியோ பயணத்தை பாம்பியோவுடனான சந்திப்புடன் தொடங்குகிறேன். பல துறைகளில் இரு நாட்டு கூட்டணியை உறுதிப்படுத்த விரும்புகிறேன். இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஸ்திரத்தன்மை வளம் ஆகியவற்றை உறுதிப்படுத்த தொடர் முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார்.

இதையும் படிங்க:சீனாவுக்கு செக் வைக்கும் இந்திய - அமெரிக்க கூட்டணி

ABOUT THE AUTHOR

...view details