ஜாவத் ஷரீஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்கா அவர் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து கிண்டலாக பதிலளித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இதுகுறித்து, ‘ஜாவத் ஷரீஃபுக்கு ஈரானில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளது. அவரது இச்செயல் ஈரான் மக்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுத்துவதற்கும், அவர்களை ஒடுக்குவதற்கும் வழிவகுக்கும்’ என சாடியுள்ளார்.
மேலும், அமெரிக்க மூத்த அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷரீஃப், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சராக செயலபடுவதற்குப் பதிலாக ஈரானின் பிரச்சார பீரங்கியாக செயல்படுகிறார்.’ என்றார்.
அமெரிக்கா பயங்கரவாத செயல்களில் தொடர்பிருப்பவர்களின் மீது நடவடிக்கை எடுத்தால், குற்றம் சுமத்தப்பட்டவரின் அனைத்து சொத்துக்களையும் முடக்குவது வழக்கம் என்பது நினைவு கூறத்தக்கது.