தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பரப்ப அமெரிக்காவில் சட்டம்! - காந்தியின் கொள்கைகளை பரப்ப அமெரிக்காவில் சட்டம்

வாஷிங்டன்: மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங் ஆகியோரின் கொள்கைகள் குறித்து மக்களிடையே பரப்புரை செய்யும் வகையில் அமெரிக்காவின் நாடாளுமன்ற கீழ் சபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கீழ் சபை
கீழ் சபை

By

Published : Dec 4, 2020, 3:55 PM IST

இந்திய, அமெரிக்க நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங் ஆகியோரின் கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமி பேரா உதவியில், மனித உரிமை ஆர்வலரான ஜான் லூயிஸ், இச்சட்டத்தை இயற்றியுள்ளார். இருநாட்டு கல்வியாளர்கள் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் காந்தி - கிங் அறிவுசார் பரிமாற்ற முயற்சி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங் ஆகியோரின் கொள்கைகளை மக்களிடையே பரப்ப முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை ஆணையத்தின் தலைவர் எலியட் ஏங்கல் நாடாளுமன்றத்தில் கூறுகையில், "காலநிலை மாற்றம், கல்வி, பொது சுகாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்திய, அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்க இச்சட்டம் வழிவகைச் செய்யும்.

மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங் ஆகியோரின் கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் செல்லவும் இந்திய அமெரிக்க நாடுகளிடையேயான நீண்டகால உறவை கெளரவிக்கும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது" என்றார்.

அமெரிக்க கீழ் சபையில் இது குறித்து அமி பேரா கூறுகையில், "காந்தி, மார்டின் லூதர் கிங் ஆகியோரைப் போன்று ஜான் லூயிஸும் தனது செயல்களால் உலகில் அகிம்சை கொள்கைகளைப் பரப்பினார். மனித உரிமைகள், சமத்துவம், அனைவருக்குமான நீதி ஆகியவற்றில் உறுதியாக இருந்தார். லூயிஸின் கொள்கைகளை எடுத்துரைக்க காந்தி - கிங் அறிவுசார் பரிமாற்ற முயற்சி சட்டம் பேருதவியாக அமையும்

காந்தி, மார்டின் லூதர் கிங், லூயிஸ் ஆகியோரின் விழுமியங்களை நிலைநாட்டு இந்திய, அமெரிக்க நாடுகளின் நீண்டகால பாரம்பரியம் உதவும். ஆனால், அவர்களின் கொள்கைகள் தற்போது இருநாடுகளிலும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இச்சட்டத்தை நிறைவேற்றுவதில் பெருமை கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details