தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கிம் மாயமான விவகாரம்: வடகொரியாவை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என அமெரிக்கா தகவல் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் எங்கே

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை; ஆனால் அந்நாட்டின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

north korea
north korea

By

Published : Apr 30, 2020, 7:34 PM IST

அணு ஆயுதம், ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டு சர்ச்சை நாயகனாக வலம் வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சில வாரங்களாக வெளியில் தலைகாட்டவில்லை.

இதனிடையே, அவர் உடல்நிலை மோசமாக உள்ளது, கோமாவில் உள்ளார், இறந்துவிட்டார் என கடந்த ஒரு வாரமாக வதந்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கிம் ஜாங் உன் மாயமான விவகாரம் குறித்து, தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, "அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

புதிதாக வேறெந்த தகவலும் இல்லை. ஆனால், வடகொரியாவின் நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.

வடகொரியா அதன் அணு ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். ஆகையால் தான், அந்நாட்டை கண்காணித்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க : மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - இந்திய வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details