அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பின் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் தாக்கம் தீவிரமாக இருக்காது.
இருப்பினும், நுரையீரல், இதயம் ஆகிய பகுதிகளில் சிக்கல் உள்ளவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு மூச்சு விடுவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. அவ்வாறு கரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படும் சுமார் மூன்று முதல் ஐந்து விழுக்காடு நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்தியாவில் தேவைப்படும் அனைவருக்கும் ஏற்ப வென்டிலேட்டர்கள் இல்லை. ஒருபுறம் வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தாலும் அவை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை.