அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹோஸ்டன் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக ஹோஸ்டன் நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்! 5 பேர் பலி - US gun shooting - five killed
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா ஆகிய இரு மாகாணங்களில் நடைபெற்ற வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இதே போன்று தெற்கு கலிபோர்னியாவின் கரோனா நகரில் உள்ள மொத்த வியாபார கடையில், ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இதைக்கண்ட அங்கிருந்த மற்ற நபர்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடினர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை கைதுசெய்தனர். பின்னர் காயமடைந்த இரண்டு நபர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அமெரிக்காவில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.