தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கனிலிருந்து மேலும் 4,000 படை வீரர்களைத் திரும்பப்பெறும் அமெரிக்கா?

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் மேலும் நான்காயிரம் படை வீரர்களை அமெரிக்கா திரும்பப் பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Afghanistan
Afghanistan

By

Published : Jun 27, 2020, 5:54 PM IST

ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக்கொண்டுவர அமெரிக்கா 2002ஆம் ஆண்டு தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. நீண்ட போராட்டத்திற்குப் பின், 2011ஆம் ஆண்டு அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அத்துடன் ஆப்கானிஸ்தானிலிருந்த தலிபான் ஆட்சியை நீக்கி புதிய ஜனநாயக அரசை அமெரிக்கா நிறுவியது. மேலும், அப்பகுதியில் மீண்டும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்கா-தலிபான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படைகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டுவருகின்றன.

முதல்கட்டமாக, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படைகளை 8,600ஆக குறைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருக்கும் மேலும் நான்காயிரம் படை வீரர்களை அமெரிக்கா திரும்பப் பெறவுள்ளதாக சி.என்.என். நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், 2001ஆம் ஆண்டுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் 4,500க்கும் குறைவான அமெரிக்க வீரர்கள் மட்டுமே இருப்பது இதுவே முதல்முறையாகவும். அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர், நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து சி.என்.என். நிறுவனம் இத்செய்தியை வெளியிட்டுள்ளது.

தலிபானுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்துப் படைகளையும் அடுத்தாண்டு ஏப்ரல் மாத்திற்குள் அமெரிக்கா திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைவிதித்த அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details