தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹைடிராக்சி குளோரோகுவின் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை!

வாஷிங்டன் : கரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைடிராக்சி குளோரோகுவின் மாத்திரையை உண்டாக்கும் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கும் வகையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

cdc
cdc

By

Published : Apr 28, 2020, 12:27 AM IST

இது தொடர்பாக அதன் ஆணையர் ஸ்டீபன் எம். ஹான் கூறுகையில், "நோயாளிகளைக் குணப்படுத்த எந்தெந்த சிகிச்சை முறைகள் பயன்படுத்தலாம் என சுகாதாரத் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அவர்கள் சரியான முடிவு எடுப்பதற்கு ஏதுவாக உரிய தகவல்களைத் தொடர்ந்து அளித்து வருகிறோம்.

கோவிட்-19 வைரஸ் சிகிச்சைக்கு சோதனை முறையில் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகளின் பக்க விளைவுகள் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இவை பாதுகாப்பானதுதானா, கோவிட்-19ஐ திறம்பட எதிர்கொள்ளுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மாத்திரைகளுக்கு உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கிய பின்பு அதனை மருத்துவர்கள் பயன்படுத்த ஆரம்பிப்பர்" என்றார்.

இதையும் படிங்க : லைசால்... பிளீச்சிங் பவுடர்...ட்ரம்ப் பேச்சைக் கேட்டு விபரீத முடிவெடுத்த நியூயார்க் வாசிகள்

ABOUT THE AUTHOR

...view details