உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், கடந்த 3ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஐந்து நாள்களைக் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் முழுமையான முடிவுகள் வெளிவரவில்லை. மொத்தம் 570 எலக்டோரல் (Electoral) வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றவர்கள் அதிபராக அறிவிக்கப்படுவார்கள்.
தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் 253 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகுக்கிறார். குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் 213 வாக்குகளைப் பெற்றுள்ளார். சி.என்.என் (CNN) கணிப்பின்படி மாலை நான்கு மணியளவில் (அதிகாலை 2:30 மணி) பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவாடா மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களில் பிடன் முன்னிலையில் உள்ளார்.