தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க அதிபர் தேர்தல் உடனுக்குடன் - யாருக்கு வெற்றி

US Election 2020 Live Update
US Election 2020 Live Update

By

Published : Nov 3, 2020, 10:53 PM IST

Updated : Nov 4, 2020, 12:45 AM IST

00:43 November 04

குடியரசுக் கட்சி வேட்பாளரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள், ட்ரம்பின் பிரச்சாரத் தலைமையகத்தில் கூடி, கரகோஷம் எழுப்பி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது தன்னை மீண்டும் அதிபராக்கப் போராடும் கணக்கிலடங்காத ஊழியர்களுக்கு தனது நன்றியை ட்ரம்ப் பதிவு செய்தார்.

தொடர்ந்து, தான் வெற்றிபெறுவது குறித்து உறுதி அளித்த ட்ரம்ப், ”எனினும் இது அரசியல், தற்போது நடப்பது தேர்தல். நம்மால் இதைக் கணிக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.

பென்சில்வேனியாவில் வெற்றி பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் எடுத்துரைத்தார்.

00:29 November 04

ஜோ பிடனின் பிரச்சாரம் நொறுங்கத் தொடங்கியுள்ளதாகவும், பிடன் ஆதரவாளர்கள் பயத்தில் உறைந்துள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்பின் மகன் எரிக் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

00:20 November 04

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியானால் அது நாட்டிற்கும் பெண்களுக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், பிடன் - ஹாரிஸ் இணை வெற்றிபெற்றால் அமெரிக்கா தற்போது உள்ளது போல் இருக்காது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

22:59 November 03

ஜோ பிடன் பிலடெல்பியாவின் ஸ்க்ரான்டனிலுள்ள குழந்தை பருவ வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

21:14 November 03

செவ்வாய்க்கிழமை அதிகாலை, தனது சொந்த ஊரான ஸ்க்ரான்டனில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நடுத்தர வர்க்கம், இந்நாட்டை கட்டியது உங்களுக்குத் தெரியும். வால் ஸ்ட்ரீட் அதைக் கட்டவில்லை. நடுத்தர வர்க்கம் தான், அதை கட்டியது. தொழிற்சங்கங்கள் நடுத்தர வர்க்கத்தை கட்டியெழுப்பின என்றார். பிலடெல்பியாவுக்குச் செல்லும் முன்பு ஸ்க்ரான்டனில், நாட்டின் முதுகெலும்பை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஜோ பிடன் பேசினார்.

Last Updated : Nov 4, 2020, 12:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details