வாஷிங்டன்: அமெரிக்க பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 33 சதவீத இழப்பை சந்தித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தமட்டில், 1947ஆம் ஆண்டிற்கு பிறகு மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. முந்தைய ஜனவரி-மார்ச் காலாண்டில் 5 சதவீத வீழ்ச்சி காணப்பட்டது.
மேலும் கடந்த காலாண்டில் நுகர்வோர் செலவினங்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. வணிகம், முதலீடுகள் சரிவை சந்தித்தன. 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலையின்மை காரணமாக அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதிலிருந்து மீள முடியாமல் ட்ரம்ப் நிர்வாகம் திணறிவருகிறது. இதற்கிடையில் வருகிற நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் விற்பனையான மூன்றில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவை!