அமெரிக்கா - சீனா இடையே நடைபெற்றுவரும் மறைமுக மோதல் கரோனா பாதிப்புக்குப்பின் அடுத்தக்கட்டதை எட்டியுள்ளது.
கரோனா பாதிப்பிற்கு சீனா மற்றும் உலகச் சுகாதார அமைப்பைத் சாடிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் பரப்புரைக்கு சீனாவை முக்கிய ஆயுதமாகக் கையிலெடுத்துள்ளார்.
இந்நிலையில், சீனாவின் நான்கு செய்தி ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமெரிக்காவில் இயங்கும் சர்வதேச ஊடகங்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும்விதமாக, சீனாவைச் சேர்ந்த நான்கு செய்தி நிறுவனங்களை "foreign missions" எனப்படும் வெளிநாட்டுப் பணிகள் என்ற பிரிவின் கீழ் அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.