அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ரஷ்ய அரசின் உதவியுடன்தான் வெற்றி பெற்றதாக எழுந்த குற்றசாட்டு குறித்து ராபர்ட் முயுல்லர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு கடந்த 22 மாதங்களாக விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணை கடந்த வாரத்துடன் முடிவடைந்த நிலையில் முயுல்லர் தன் 300 பக்க அறிக்கையை அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் வில்லியம் பாரிடம் அளித்தார். இந்த விசாரணை அறிக்கையை ஆராய்ந்த வில்லியம் பார், ட்ரம்பின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை என்றும், அதே சமயம் ட்ரம்ப் குற்றமற்றவர் என்பதும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.