முன்னாள் ராணுவ புலனாய்வு ஆய்வாளர் செல்சியா மேனிங், அமெரிக்க ரகசியங்களைக் கசியவிட்டதாகக் கூறி அவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் வர்ஜீனியாவில் உள்ள அலெக்சாண்டிரியா தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டார். தற்போது ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரித்த அமெரிக்காவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி அந்தோணி ட்ரெங்கா, செல்சியா மேனிங்கை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்படியே அவர் இன்று விடுதலையாகி வெளியே வந்தார்.
முன்னதாக, சிறையிலிருந்த செல்சியா மேனிங் தனது போர்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீன செல்போன்களுக்கு 'நோ' சொல்லும் அமெரிக்கா!