ஈரான்-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவிவருகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்துவரும் அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இரு நாடுகள் சமரசம்?
பிராந்திய அமைதியை நோக்கில் கொண்டு, இரு நாடுகளிடையே சமரச முயற்சி, கடந்த 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பலனாக ஜேசிபிஓஏ( Joint Commission of the Joint Comprehensive Plan of Action - JCPOA) என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் கையெழுத்திட்ட நிலையில், சில ஆண்டுகளிலேயே இந்த சமரசம் பின்னடைவைச் சந்தித்தது.